MCM Awards 2015 – 9 Awards Won by ‘Echo8’ Productions’s “ETHILIKAL” Team at Midlands College of Media’s

NINE  Awards was Won by  Echo8 Productions‘s “ETHILIKAL” Team at Midlands College of Media’s MCM Awards 2015 in Leicester,UK.

eethilikal1

*Best Film 1st Prize 
*Best Director – (Prem Kathir)
*Best Script – (Prem Kathir)
*Best Cinematography – (Sayan Moorthy/Pressana Selvaratnam)
*Best Editing – (B Surendran)
*Best Music – (Girishh Gopalakrishnan)
*Best Sound Designs – (Prathap Kumar)
*Best Actor Lead – (Ramesh Thirugnanam)
*Best Actress Lead – (Shahela Rani)

“எனக்கு கலையுலகில் அங்கீகாரம் பிரேம்கதிர் மூலமாகத்தான் கிடைத்தது” – நடிகர் சுவிஸ் ரமேஷ் !

14703_10206182139693764_1736974543934871151_n* பந்தா, திமிர், இதெல்லாம் கிலோ என்ன விலை?” என்று கேட்குமளவுக்கு இருக்கிறது நடிகர் சுவிஸ் ரமேஷின் பண்பான பேச்சு. “நான் எதையுமே சாதிக்கவில்லை. நான் சாதாரணமானவன்” என்று அடிக்கடி சொல்லிச் சொல்லியே எங்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துவிடுகிறார்.

* 28 வருடங்களாக நடிப்புத்துறையில் இருக்கும் ரமேஷின் சொந்த இடம் புங்குடுதீவு. ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே கொக்குவிலாம்.
* பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்த போதும், நாட்டுச் சூழல் காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை என்று சொல்லும் போது ரமேஷின் குரலில் மெல்லிய வருத்தம். இருந்தாலும் நடிப்புத்துறையில் கிடைக்கும் திருப்தி, எல்லக் கவலைகளையும் மறக்க வைக்கிறது என்கிறார்.

* 1984 ம் ஆண்டு தனது 12 வயதில் “சுந்தரமூர்த்தி நாயனார்” என்ற தலைப்பிட்ட ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் ரமேஷ். அந்த நாடகத்துக்கு முதலாவது பரிசு கிடைக்கவே, மிகவும் உற்சாகமாகிவிட்டார். இதுவே நடிப்புத்துறைக்கான தூண்டுதலாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

10169338_10203413259233483_864419814_n* இயக்குனர் கேசவராஜாதான் ரமேஷை முதல் முதலாக கமெரா முன் கொண்டுவந்திருக்கிறார். 1986 ல் அவர் எடுத்த “தாயகமே தாகம்” திரைப்படத்தில் ரமேஷுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்து நடிக்க வைக்க, அதுவே ரமேஷின் கலைவாழ்வுக்கு நல்லதொரு பிள்ளையார் சுழியாக அமைந்துவிடுகிறது.

* 1987 ல் “பூததம்பி” என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு. அதே படத்தில் சி வி கே சிவஞானம் போன்ற பெரிய கலைஞர்களும் நடித்தார்களாம். “அப்படத்தில் நடித்தது மிகவும் மறக்க முடியாத ஓர் அனுபவம்” என்று குறிப்பிட்ட ரமேஷ் “சொறி ப்ரோ படத்தின் இயக்குனர் பெயர் நினைவில்லை” என்று வருத்தமாகச் சொன்னார்.

* 1999 ல் இந்தியாவுக்கு வந்த ரமேஷூக்கு சினிமா மீதான காதல் மேலும் அதிகரிக்கிறது. ஒருமுறை எம் ஜி ஆர் சினி சிட்டியில் நடந்த “தீபம்” தொடரின் ஷூட்டிங் பார்க்க போயிருக்கிறார். நடிகர் ஜெய்கணேஷ், அஞ்சு நடிக்கும் நாடகம் அது. அப்போது ரமேஷை அழைத்த அந்த நாடகத்தின் இயக்குனர், ஒரு காட்சியைக் கொடுத்து “இதை நடிக்க முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். அந்தக் காட்சியினை ரமேஷ் நடித்துக்காட்ட நெகிழ்ந்துபோனாராம் ஜெய் கணேஷ்.

* இந்தியாவில் இருந்து சுவிஸுக்கு வந்த ரமேஷ், தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற “பிடிக்கல பிடிக்கல” நிகழ்ச்சியில் நடிக்க ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட 20 வரையான எபிஷோட்களில் நடித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி மூலமாகத்தானாம் “சுவிஸ் ரமேஷ்” என்ற பெயரும் வந்ததாம். தீபம் தொலைகாட்சிக்கும், திரு.சாம் பிரதீபன் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவன் என்கிறார் ரமேஷ்.

10407663_10206182139253753_1192590273763487420_n* சுவிஸ் ரமேஷின் திறமைகள் கோடம்பாக்கத்திலும் நிரூபிக்கப்படுகின்றன. தற்போது பல தமிழக படங்களில் நடித்துவருகிறார்.

* சுவிஸ் ரமேஷ் நடித்த காதலுக்கு கண் இல்லை” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதில் போலீஸ்காரர் வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

* அதேபோல “சுவிஸ் ராஜா” என்ற படமும் விரைவில் திரைக்கு வருகிறது – தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்…!

* இயக்குனர் ஜனா இயக்கும் “மிக்ரா” என்ற படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் சுவிஸ் ரமேஷ்.

* மேலும் செந்தூரப்பூவே படத்தின் ரீமேக்கிலும், ஜெய் ஆகாஷ் நடிக்கும் இன்னொரு படத்திலும், இயக்குனர் பழனியின் பிறிதொரு படத்திலும் நடிப்பதற்க்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் நம்ம சுவிஸ் ரமேஷ்.

* பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கும் சுவிஸ் ரமேஷுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். மேலதிக விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தருகிறேன் என்கிறார்.

10516780_10206182139013747_1001475894170294273_n* அண்மையில் நடைபெற்ற ”உலக தமிழ் குறும்பட விழா”வில் விருதுவென்ற, இயக்குனர் பிரேம் கதிரின் “ஏதிலிகள்” குறும்படத்தில் முக்கிய வேடத்தில் ரமேஷ் நடித்திருக்கிறார். இதே படத்துக்கு பிரான்சில் “சிறந்த நடிகருக்கான” விருதும் வாங்கியிருக்கிறார் ( சங்கிலியன் விருது ). “எனக்கு கலையுலகில் அங்கீகாரம் பிரேம்கதிர் மூலமாகத்தான் கிடைத்தது” என்று பெருமையுடன் கூறினார் ரமேஷ். இயக்குனர் பிரேம்கதிருக்கும் அவர் நன்றி சொல்ல மறக்கவில்லை.

* இலங்கையில் தயாராகும் முழுநீள படம் ஒன்றில் நடிப்பதற்கும் ரமேஷுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். என்றாலும் படக்குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேலதிக தகவல்களுக்கு “மூச்ச்ச்” என்றார் ரமேஷ்

*டேவிட் லென்சிங் இயக்கத்தில் வெளிவந்த “Inder Verzweiflung ” என்னும் குறும்படம் பல்லாயிரக்கணக்கான (2115) படங்களில் 2ம் இடத்துக்கு தெரிவகியமைமை அடுத்து ஜேர்மன் மொழியில் தயாரிக்கப்படும் முழுநீளத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரமேஷ் .(David J.Lensing இன் இயக்கத்தில் மீண்டும் )

* சுருக்கமாக, சுவையாக நம்மிடம் பேசிய சுவிஸ் ரமேஷ், ஈழத்திரையின் பணிகளை பாராட்டவும் தவறவில்லை. அவரின் மனம் திறந்த பாராட்டுக்களால் நெகிழ்ந்தே போனோம். குறிப்பாக “வெளிநாட்டில் இருக்கும் எம்மை விடவும், தாயகத்தில் இருக்கும் கலைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துவிட வேண்டும்” என்று வேண்டுகோளும் வைத்தார்.
கலைஞர் சுவிஸ் ரமேஷ் அவர்களின் கலைப்பயணம் சிறக்க ஈழத்திரையின் வாழ்த்துக்கள்..!

http://www.eezhathirai.com/swiss-ramesh/

மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன்

11048665_620651494702778_7706373170213110111_o 11081238_10206182140493784_1337836109344099391_n

Related posts